மாவட்ட அளவில் நடைபெற்ற நெட்பால் போட்டியில் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி முதல்இடம்





அரியலூர் மாவட்ட நெட்பால் கழகம் நடத்திய 14 வயதிற்கு உட்பட்டோருக்கான மாவட்ட அளவிலான  போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு நெட்பால் போட்டிகள் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா பள்ளி முதலிடம் பெற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக் ராஜன் செய்திருந்தார்.