வேலூரில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!!!!

          வேலூர்: மதுரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அரிச்சந்திரனின் தற்கொலைக்கு காரணமான போக்குவரத்து ஆய்வாளரை கண்டித்து சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பாஸ்கர், காமராஜ் உட்பட பல்வேறு ஆட்டோ நிறுத்துமிடங்களை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் முன்னிலை வகித்தனர்.
சிஐடியு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் முரளி, பொருளாளர் ராமு ஆகியோர், ஆட்டோ டிரைவர் தற்கொலைக்கு காரணமான ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு ₹25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.