திருப்பூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆதி தமிழர் பேரவையின் சார்பில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பொன்.ராஜேந்திரன் தலைமையில் மனு அளித்தனர். இந்த மனு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்ராஜேந்திரன் காங்கயம் வட்டம், வெள்ளகோவில் ஒன்றியம் , மாங்கல் பட்டி கிராமத்துக்கு உட்பட்ட பெரிய காங்கேயம் பாளையத்தில் கடந்த 2017-2018 ஆம் ஆண்டு காங்கயம் ஆதிராவிடர் நலம் மூலம் 22 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா தரப்பட்டது. அதை இன்று வரை அளந்து விடவில்லை.
அதுபோல வெள்ளகோவில் நகரத்திற்கு உட்பட்ட உப்புப்பாளையம் பகுதியில் கடந்த 2006ஆம் ஆண்டு காங்கேயம் ஆதிதிராவிடர் நலம் மூலம் 32 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா தரப்பட்டது. இதுவும் இன்று வரை அளந்து விடவில்லை. இது சம்பந்தமாக பல ஆண்டுகளாக மனு அளித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை காலம் தாழ்த்தி வருகிறார்கள். எனவே சமூகம் அவர்கள் இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு நிலத்தை அளந்து விடுவதற்கு உத்தரவிடுமாறு மனு அளித்ததாக தெரிவித்தார்.ஆதி தமிழர் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.