‘திருமதி கார்ட்’ செயலி அசத்திய திருச்சி மாணவர்கள்












திருச்சி பிப்19,
திருச்சியில் உள்ள, தேசிய தொழில்நுட்பக் கழகத்தின், பி.டெக்., மாணவர்கள் ஒருங்கிணைந்து, ‘திருமதி கார்ட்’ என்ற, மொபைல் போன் செயலியை உருவாக்கியுள்ளனர். தேசிய தொழில்நுட்பக் கழகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், திருச்சி கலெக்டர் சிவராசு, புதிய செயலியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, அவர் பேசியதாவது: இந்த, ‘திருமதி கார்ட்’ செயலி மூலம், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், இல்லத்தரசிகள் தயாரிக்கும் கைவினைப் பொருட்கள் மற்றும், ‘ஆர்கானிக்‘ காய்கறிகளை விற்பனை செய்யலாம். பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, இந்த செயலி பெரும் உதவியாக இருக்கும். இந்த செயலியை பயன்படுத்தும் முறை பற்றி, தேசிய தொழில்நுட்பக் கழகத்தில், ஐந்து நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.