தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருவதால் வாடிக்கையாளர்கள் கவலையில் உள்ளனர். இன்று ஒரே நாளில் சவரன் ரூ.872 உயர்ந்து புதிய உச்சமாக ரூ.33,848ஆக எட்டி உள்ளது. கொரானா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. இதனால் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் தங்கம் விலையிலும் எதிரொலிக்கிறது. பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்பாதவர்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்கின்றனர். இதன்காரணமாகவும், ரூபாயின் மதிப்பு சரிவாலும் தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது. ஒரு மாத காலமாகவே தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இன்று புதிய உச்சமாக சவரன் ரூ.33,848-ஐ எட்டி உள்ளது.
சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று (மார்ச் 6) காலைநேர நிலவரப்படி, 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.109யும், சவரன் ரூ.872 உயர்ந்து ரூ.33,848க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை சவரன் ரூ.1,090 உயர்ந்து ரூ.44,370க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.50.70க்கு விற்பனையாகிறது.