கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையால் நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இன்று தருமபுரி அருகே உள்ள லெப்ரஸு காலனியில் வசிக்கும் 71 ஏழை குடும்பங்களுக்கு தேவையான அரிசி,பருப்பு, காய்கறிகள் மற்றும் கீரை ஆகியவை மகிழம் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. இதில் மகிழம் அறக்கட்டளை சார்பில் மணிகண்டன், பிரகாஷ், ரகு, சின்னசாமி மற்றும் சுகாதார ஆய்வாளர் திரு. லோகநாதன் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கினர்.
தருமபுரி மகிழம் அறக்கட்டளை சார்பில் ஏழை குடும்பங்களுக்கு உதவி...