புதுச்சேரி மாநிலம் ஐய்யங்குட்டி பாளையத்தில்  ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு....

                 புதுச்சேரி மாநிலம் ஐய்யங்குட்டி பாளையத்தில்  ஒரு நபருக்கு கொரோனா
பாதிப்பு ஏற்பட்டதால்..திருக்கனூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வழுதாவூர் சாலையில்  பூத்துறை பங்களாமேடு அருகே போலீசார் வாகனங்கள் 
அய்யங் குட்டிபாளையம் வழியாக புதுச்சேரிக்கு செல்ல முடியாத வண்ணம்      மெயின்ரோட்டில் தடை ஏற்படுத்தி உள்ளனர். 
              இதனால் திருக்கனூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் பூத்துறை வழியாகவும், கோபாலன் கடை வழியாகவும், மாற்றுப்பாதையில் சென்றனர்.
அப்பகுதி மக்களும் தங்கள் ஊர் வழியாக வாகனங்கள் செல்ல கூடாது என குறுக்கே தடுப்பு கட்டைகள் அமைத்து வருவதால் வாகன ஓட்டிகள் புதுச்சேரி செல்வதற்கு வழி இல்லாமல் ஊசுட்டேரி வழியாகவே மாற்று பாதையில் செல்கிறார்கள்.