சிவகங்கை வாலாஜா நவாப் ஜமாத் ஜும் ஆ பள்ளிவாசல் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமே நிலைகுலைந்து நிற்கிறது. இந்த வைரஸை அழிக்க நேரடியாக மருந்துகள் இல்லாததால், சமூக விலகல் மட்டுமே தீர்வாக இருக்கிறது. அதனால் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன. இந்த ஊரடங்கால் அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், நாடோடிகள், பழங்குடி மக்கள் மிகப்பெரும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அன்றாட உணவே அவர்களுக்குக் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் பல்வேறு இடங்களில் தங்களின் பணியை சிறப்பாக செய்துவருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு நடைபெற்ற காலங்களில் சிவகங்கை நகரில் மிகவும் சிறப்பாக பணிபுரிந்த சிவகங்கை நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சிவகங்கை வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் ரமலான் மாதத்தின் சிறப்பு பொருந்திய லைலத்துல் கதர் இரவு நாளான இன்று துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்து அவர்களுக்கான நிவாரண பொருட்களை சிவகங்கை வாலாஜா நவாப் ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாக தலைவர் அன்வர் பாட்சா, செயலாளர் காஜா முகைதீன், பொருளாளர் அக்பர் அலி, ஆகியோர் நிவாரணப் பொருள்களை நவாப் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.