கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமே நிலைகுலைந்து நிற்கிறது. இந்த வைரஸை அழிக்க நேரடியாக மருந்துகள் இல்லாததால், சமூக விலகல் மட்டுமே தீர்வாக இருக்கிறது. அதனால் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன. இந்த ஊரடங்கால் அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், நாடோடிகள், பழங்குடி மக்கள் மிகப்பெரும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அன்றாட உணவே அவர்களுக்குக் கேள்விக்குறியாகியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள திட்டங்கள் இந்த மக்களைப் பெரிய அளவில் சென்றுசேரவில்லை. இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் பல்வேறு இடங்களில் தங்களின் பணியை சிறப்பாக செய்துவருகின்றனர்.இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் மக்கள் பாதையின் சார்பாக கலப்பை திட்டத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து வாழைத்தார்களை வாங்கி மானாமதுரை ஒன்றியத்தில் உள்ள அருளானந்தபுரம், சர்க்கஸ் தொழிலாளிகள் வசிக்கும் கலைக்கூத்து நகர், மாரியம்மன் குடியிருப்பு பகுதியில் உள்ள சுமார் 150 குடும்பங்களுக்கு மக்கள் பாதை சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிராங்கிளின் மற்றும் மானாமதுரை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சுசீந்திர பிரசாத் வழங்கினர். நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் அன்றாட உணவிற்கு கஷ்டப்படும் எங்களுக்கு நீங்கள் செய்யும் உதவியை எங்கள் வாழ்வில் என்றும் மறக்க மாட்டோம் என்று மக்கள் பாதை இயக்கத்திற்கு போது மக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்களுக்கு சிவகங்கை மாவட்டம் மக்கள் பாதை இயக்கத்தின் சார்பாக உதவி !