மனதை உருக்கும் இந்த புகைப்படத்தில் உள்ள புலம் பெயர் தொழிலாளரின் பெயர் ராம் புகார் பண்டிட். டெல்லியில் பணியாற்றிக் கொண்டிருந்த இவர், உத்தரப் பிரதேசத்திலிருந்து சாலை மார்கமாக பீகாருக்கு சென்றபோது, இவரின் மகன் இறந்த செய்தி கேட்டு அவர் அழுகையில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
இவர் குடியிருந்த வீட்டு உரிமையாளர் வாடகை தராததால் இவரை வெளியேற்றினார். இதனால் பீகாரை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
அவர் தனது சொந்த ஊரான, பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தை சென்று அடைந்து விட்டார். எப்படி உங்கள் ஊரை சென்றடந்தீர்கள் என்று அவரிடம் கேட்டபோது "எனக்கு எதுவுமே நினைவில்லை. சல்மா ஆசிப் மேடம்தான் எல்லாவற்றையும் செய்தார். என்னை ரயிலில் அமர வைத்தார். கிளம்புகையில் வாழைப்பழங்கள் வாங்கி கொடுத்தார்" என்றார்.