கோவில்களில் பக்தர்களை அனுமதிக்கக் கோரி இந்து முன்னணியினர்
தோப்புக்கரண போராட்டம்!!! ""தமிழ்நாடு முழுவதும் நடந்தது!!!!
கோவில்களில் பக்தர்களை அனுமதிக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும்
இந்துமுன்னணியினர் தோப்புக்கரண போராட்டத்தை நடத்தினார்கள்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு காலத்திற்குமுன்னரே
சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தியேட்டர்கள், வர்த்தக வளாகங்கள் மூடப்பட்டன.
கோயில்களும் அடைக்கப்பட்டன. பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் இதே நிலை நீடித்து வருகிறது.
இந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. கடைகள் கூடுதல்
நேரம்திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆகவே கோயில்களை திறக்க அனுமதிக்க வேண்டுமென இந்துமுன்னணியினர்
வலியுறுத்திவருகின்றார்கள்.
இதற்காக முக்கிய கோயில்கள் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்கள்..
அதன்படி தமிழ்நாட்டில்இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளகோயில்களின் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடந்தது. மதுரை, திருவண்ணாமலை, திருவாரூர் உள்ளிட்ட எல்லா பெரிய கோவில்களின் முன்பும்
இன்று போராட்டம் நடந்தது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் 29 கோவில்கள் உள்ளன.அவைகள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவில்களை திறக்கக்கோரி வேலூரில் இந்து முன்னணியினர் அனைத்து கோவில்களின் முன்பாகவும் தோப்புக்கரணம் மற்றும் பல்டி அடித்துநூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் கோட்டை கோவில் முன்பாக இந்துமுன்னணி கோட்ட பொறுப்பாளர்
மகேஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதேபோல் காட்பாடி ,
ஆற்காடு ராணிப்பேட்டை வாலாஜா உள்ளிட்ட இடங்களிலும் இப்போராட்டம் நடைபெற்றது