ஒன்பது வயது மாணவியைப் பாராட்டி கௌரவித்த மாவட்ட ஆட்சியர்.....

                      புதுச்சேரி இமாகுலேட் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு செல்ல இருக்கும் தியா என்கிற 9 வயது மாணவி தான் எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்ற லட்சியத்தோடு தனது பொது அறிவை வளர்த்துக் கொள்ள எண்ணி மடிக்கணினி வாங்குவதற்காக தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொடுத்த சிறு சிறு தொகையினை உண்டியலில் சேமித்து வைத்திருந்தார்.                                           அவ்வாறு சேமித்து வைத்த ரூ.24,347-ஐ கொரோனா நோய் பரவலைத்  தடுக்க         அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு காலத்தில் வேலையின்றி தவித்து வரும் கைத்தறி நெசவாளர்கள், நாதஸ்வர கலைஞர்கள், பிற மாநிலத் தொழிலாளர்கள், இலவச ஆம்புலன்ஸ் ஓட்டும் வாகன ஓட்டுநர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் நலிவுற்ற ஏழை குடும்பங்கள் என இதுவரை 57 குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களான அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள், குழந்தைகளுக்கு பிஸ்கெட், பெண்களுக்கு நாப்கின்  உள்ளிட்ட பொருட்களை மனிதநேயத்துடன் வாங்கி கொடுத்து உதவி வருகின்றார்.                                                                                                                              இச்செய்தியை அறிந்த புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் Dr. T. அருண், இ.ஆ.ப., அவர்கள் மாணவி தியாவைத் தொடர்பு கொண்டு மாவட்ட ஆட்சியரகத்திற்கு அழைப்பு விடுத்தார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியரகத்திற்கு வந்த மாணவி தியாவை வரவேற்ற மாவட்ட ஆட்சியர் அவர்கள், அம்மாணவி செய்து வரும் மனிதநேய உதவிகளை வெகுவாகப் பாராட்டியதோடு, தனது இருக்கையில் அமரவைத்து கௌரவித்தார்