திருப்பத்தூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் , குறை தீர் கூட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் ஊரடங்கால் முடக்கப்பட்டுள்ளன. இத னையடுத்து கடந்த15
தேதி முதல் 22–ஆம் தேதி வரை அந்தந்த பகுதி வருவாய் அதிகாரிகள் கிராமமக் களிடம் நேரில் சென்று மனுக்களை பெற்றனர்.
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய 4 வட்டங்களில் உள்ள 195 வருவாய் கிராமங்களிலிருந்து 9756 மனுக்கள் பெறப்பட்டன.
அதில் 1828 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன . 7913 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. 15 மனுக்களை நிராகரிக்கப்பட்டது