விவசாயிகளுக்கு அரசு வழங்கும் இலவச மின் திட்டத்தை ரத்து செய்யக்கூடாது என வலியுறுத்தி தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டும். கரோனா ஊரடங்கால் வறுமையில் வாடும் ஏழை விவசாயிகளுக்கு ரூ.7500 நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கூடாது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடியில் வடக்கு மண்டல தலைவர் சேகர் தலைமையில், மாநில சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் அந்தோணி ராஜ் குமார் முன்னிலையில் 5 வார்டு தலைவர் மைக்கேல் பிரபாகர் 6 வார்டு தலைவர் சின்ன காளை மற்றும் கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் மத்திய மாநில அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்
தடையை மீறி ஆர்ப்பாட்டம் : முன்னாள் எம்எல்ஏ உட்பட 18பேர் கைது..
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் சாயர்புரம் நகர தலைவர் மணி, துணை தலைவர் முத்துப்பாண்டி, அமைப்பு சாரா மாவட்ட தலைவர் காடுவெட்டி பிச்சையா, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஏசுவடியான், காங்கிரஸ் நிர்வாகிகள் ராமசாமி, மற்றும் குனசிங், ஆனந்த மூர்த்தி, சவாியாணந்தம், சூசை மாணிக்கம், விக்டர், மணி, சுந்தரபாண்டியன், சுப்பையா, சிவன்ராஜ், நயினார் பாண்டியன், மச்சேந்திரன், செல்வநாயகம் உள்ளிட்டவா் கலந்து கொண்டனா். ஊரடங்கு காலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சுடலையாண்டி உட்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.