இயந்திரங்கள் இல்லாத காலகட்டத்திலேயே நமது முன்னோர் வியக்கத்தக்க வகையில், கடினமான உடலுழைப்பாலும், தியாகங்களினாலும் நமது மாவட்டத்தில் கால்வாய்களையும், குளங்களையும் உருவாக்கியுள்ளனர். இன்று அவற்றை ஒரு பொருட்டாகவே கருதாமல் பொக்லைன் போன்ற கனரக வாகனங்களை கால்வாய்களில் இறக்கி அவற்றின் கட்டமைப்புக்களை சேதப்படுத்தி வருகின்றனர். குலசேகரம் அருகே கொச்சுவீட்டுப்பாறை பகுதியில் கோதையார் பிரதான சானலில் நடைபெறும் புதர்களை அகற்றும் பணியின் மூலம் சாலையின் பக்கச்சுவர்களை பொக்லைன் இயந்திரம் மூலம் சேதப்படுத்துவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார் எழுந்ததையடுத்து அங்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டேன். பல பகுதிகளை சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளரையும், மாவட்ட ஆட்சியரையும் தொடர்பு கொண்டு பேசினேன். பொக்லைன் இயந்திரம் மூலமாக மேற்கொள்ளப்படும் பணிகளை நிறுத்திவிட்டு, பணியாட்களை பயன்படுத்தி புதர்களை அகற்றும் பணிகளை மேற்கொள்ளவும், சேதப்படுத்தப்பட்ட பகுதிகளை சீர்மைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கோரினேன். அதன் பின்னர் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையைச் சேதப்படுத்துவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்...