திருப்பூர் துளிர் அறக்கட்டளை, நாளைய திருப்பூர் மக்கள் அமைப்பு சார்பில் தினமும் கொரோனா ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு அரிசி, காய்கறிகள் மட்டும் மதிய உணவு தினமும் 150 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் பழவஞ்சிபாளையம், ஜெயலலிதா நகரில் வசிக்கும் ஏழைக்குடும்பங்கள், பல்லடம் அறிவொளிநகரில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் குடும்பம் உட்பட 50 குடும்பத்திற்கு அரிசி வழங்கப்பட்டது.
அரிசியை நன்கொடையாக மித்ரன் டெக்ஸ் செந்தில்குமார் வழங்கினார். மேலும் திருப்பூர் ஊத்துக்குளி ரோடு குளத்துபாளையத்தில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை Rtn.ஜியோ செல்வராஜ் வழங்கினார். இந்த நிகழ்வில் திருப்பூர் துளிர் அறக்கட்டளையின் கெளரவ ஆலோசகர் திரு.சுந்தரபாண்டியன் மற்றும் துளிர் அறக்கட்டளை நிர்வாகிகள் வினோத்,சுகுமார், கார்த்திக், தமிழ், ஸ்ரீனிவாசன், லீலாவதி, பிரதீபா உட்பட உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்